திருப்பதி கோயிலில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் : நாளை மறுநாள் குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச தரிசனம்

Mar 19 2018 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நாளை மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு மாதந்தோறும் இரண்டு நாட்கள் இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு, நாளை இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.

இதற்காக, காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், பிற்பகல் 2 மணிக்கு இரண்டாயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என, மொத்தம் நான்காயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதேபோல், நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, சுபதம் வழியாக இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, திருமலையில் நேற்று, யுகாதி ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 9 டன் வண்ண மலர்கள், பழ வகைககள், காய்கறிகள், இளநீர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கண்களைக் கவரும் வகையில் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. ஏழுமலையான் கோயில் முன்பகுதி உட்பட கோயில் உட்புறத்தில் இருக்கும் மண்டங்கள், துணைக் கோயில்கள், கோயில் மேற்பகுதி, தங்கக் கொடிமரம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டன. தங்கக் கொடிமரத்தைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள பூசணிக்காய்களில் கடவுள் திருவுருவங்கள் தத்ரூபமாக காட்சியளித்தன.

இந்நிலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமியை தந்தப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து, கருடாழ்வார் சன்னதி முன் உகாதி தர்பாரை அர்ச்சகர்கள் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00