உடம்பில் ஒட்டிக்கொள்ளும் உதவியாளர் போன்ற கருவி : சாதனை படைத்த தம்பதி

Nov 24 2023 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் உருவாக்கியுள்ள AI சாதனம் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது. அந்த சாதனம் என்ன? எது செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

இந்த சிறிய கருவி தான் இனி உங்கள் உதவியாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.... இதை தான் உருவாகி சாதனை படைத்துள்ளார் இம்ரான் சவுத்ரி - பெத்தானி தம்பதியினர்...

உலகின் தலை சிறந்த ஆப்பிள் நிறுவன ஐ-போனின் கொலையாளி என்று அழைக்கப்படும் "Humane AI பின்" கருவி உங்கள் பார்வைக்கு....

ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிய இந்த தம்பதி, அந்த நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றிபோது, பல ஐ-பாட்கள், ஐ-போன்கள் மற்றும் அதன் பாகங்களை வடிவமைத்துள்ளனர்.

அனைத்து iOS திட்டங்களிலும் இந்த தம்பதியினர் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுனத்தில் இருந்துவெளியேறி ஹியூமன் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

அந்த நிறுத்தின் முதல் தயாரிப்பை தற்போது அறிமுகம் செய்து தொழில்நுட்ப உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

இவர்கள் கண்டுபிடித்த அந்த சாதனம், மனிதர்களுக்கு உதவியாளருக்க இருக்கும் ஒரு சிறிய பொருள். இதனை மனிதர்கள் தங்கள் உடலில் அணிந்துகொண்டால், ஒரு உதவியாளர்கள் உங்களுக்கு என்னென்ன அறிவுரைகளை வழங்குவாறு அத்தனையும் வழங்கும். இதனால் தான் இவர்கள் இதற்கு வைத்துள்ள பெயர், "Humane AI பின்".

அவர்கள் கண்டுபிடித்த அந்த தயாரிப்பு மொபைல் போனுக்கு மாற்று என்று அழைக்கப்படுகிறது. மொபைல் போனுக்கு மாற்றாக கருதப்படும் இந்த கருவி, பார்ப்பதற்கு எளிமையாக, உபயோகத்திற்கு எளிதாகவும் இருக்கும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் கேமரா, மைக் மற்றும் புரொஜெக்டர் உள்ளதால், "Humane AI பின்" மூலம் பயனாளர்கள் பேசுவதை நேரடியாக மொழிபெயர்க்க முடியும் என கூறுகின்றனர்.

மேலும், அதன் லேசர் புரொஜெக்டர் மூலம் பயனாளர்களின் கைகளில் நேரத்தை காட்டும் அதிநவீன தொழிற்நுட்பம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

"Humane AI பின்" பயனாளர்கள் பிஸியாக இருந்தால் அதன் மூலம் நேரத்தைச் சரிபார்த்து கொள்ளும் வசதியும் உள்ளது. அதேபோல் பயனாளர்களின் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது. "Humane AI பின்" ஆரோக்கியம் மற்றும் உணவு உட்கொள்ளலையும் கவனித்துக் கொள்கிறது. பயனாளர்கள் உட்கொள்ளும் உணவு வகைகள் அவர்களின் ஆரோகியத்திற்கு ஏற்றதா என கணித்து கூறக்கூடிய வல்லமை படைத்துள்ளது.

இதுபோன்ற எண்ணிலடங்கா ஆச்சரியங்களை கொண்டுள்ள, இம்ரான் சவுத்ரியின், ஹ்யூமேன் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மற்றும் எல்ஜி மொபைல்ஸ் உட்பட சில நிறுவனங்கள் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

"Humane AI பின்" கருவியின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 58 ஆயிரத்து 342 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

"Humane AI பின்" நவம்பர் 16ம் தேதி அன்று ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளதால், இதனை பயன்படுத்த பலரும் காத்திருக்கின்றனர்....
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00