சென்னையின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை : பழையனவற்றை எரித்து புதியனவற்றை எதிர்பார்க்கும் மக்கள்

Jan 14 2024 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொழுத்தி போகியை கொண்டாடினர். இதனால், சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் புங்கத்தூரில் பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதனால், சாலைகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லா போகி கொண்டாடப்பட்டது. அப்பகுதி கிராம மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பழைய பொருட்களான துணி, பாய், தலையணை உள்ளிட்ட பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் போகி மேளம் அடித்து கொண்டாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00