பழனி மலைக்‍கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் உண்டியல் பணம் 5 கோடி ரூபாயைத் தாண்டியது - ஐயப்ப பக்‍தர்களின் வரவால் காணிக்‍கை அதிகரிப்பு

Jan 10 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், கடந்த ஒரே மாதத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்‍கை கிடைத்துள்ளது. கடந்த இரு நாட்களாக உண்டியல் காணிக்‍கை எண்ணப்பட்டதில், தங்கம் 890 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 560 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகளும் காணிக்‍கையில் அடங்கும். இவை தவிர பித்தளை வேல், கைக்‍கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளை போன்றவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதிகஅளவில் ஐயப்ப பக்‍தர்கள் மற்றும் முருக பக்‍தர்கள் வருகை காரணமாகவே அதிக உண்டியல் பணம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00