பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா தொடங்கியது - ஏராளமான பொதுமக்‍களும், கட்சித் தலைவர்களும் பங்கேற்பு

Oct 28 2018 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் விழாவும், 56-வது குருபூஜை விழாவும் அவரது சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விடுதலைப் போராட்ட வீரரும், தேசபக்‍தருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்‍டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்படுவது வழக்‍கமாகும். அதன்படி இந்த விழா இன்று விமரிசையாக தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் ஆன்மீக விழாவைத் தொடர்ந்து நாளை அரசியல் விழாவும், அதைத் தொடர்ந்து நாளை மறுதினம் குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க இன்று காலை நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாளை மறுதினம் நடைபெறும் குருபூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமுதாயத் தலைவர்களும் கலந்துகொண்டு, முத்துராமலிங்கத் தேவருக்‍கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00