கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோயிலுக்கு கேரளாவில் இருந்து கொடிமரம் வருகை - செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பொதுமக்கள் வரவேற்பு

Oct 24 2016 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு, 70 அடி நீள கொடிமரம் கேரளாவில் இருந்து முத்துக்குடைகள், செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோயில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோயிலில் நடைபெற்ற பிரசன்னம் பார்க்கும் பூஜையில், 120 ஆண்டுகள் பழமைவாய்ந்தகோயில் கொடிமரத்தின் அடி பகுதி சேதமடைந்து வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கொடிமரத்திற்கான மரம் தேடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் பட்டணம்திட்டை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஐதீக முறையில் கண்டுபிடிக்கப்பட்ட 70 அடி நீளம் கொண்ட கொடிமரம், ராட்சத வாகனம் மூலம், முத்துக்குடைகள், செண்டைமேளம், சிங்காரி மேளத்துடன் ஊர்வலமாக ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிமரத்தை வரவேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00