முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா : பல்வேறு மாநிலங்களிலும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

Oct 1 2016 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குவதையொட்டி, பல்வேறு மாநிலங்களிலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவையொட்டி வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். இந்த நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை, தசரா என்ற பெயர்களில் மாநிலங்களுக்கு ஏற்றவாறு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், நவராத்திரி திருவிழாவையொட்டி வடமாநிலங்களில் தாண்டியா மற்றும் கர்பா நடனங்கள் ஆடுவதும் வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று தொடங்குவதையொட்டி, பல்வேறு மாநிலங்களிலும், ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

மும்பையில் உள்ள மும்பாதேவி ஆலயத்தில் இன்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவையொட்டி, மும்பா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேவியை வழிபட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், நவராத்திரி விழாவையொட்டி, சுவாமி சிலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.

மொரதாபாத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேவியை தரிசனம் செய்தனர்.

டெல்லியில் ஜந்திவாலன் கோயிலிலும் நவராத்திர விழா களை கட்டியுள்ளது. நவராத்திரியின் தொடக்க நாளை முன்னிட்டு, ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00