ஆடிக் கிருத்திகையொட்டி முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

Jul 28 2016 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடிக் கிருத்திகை விழாவை தமிழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

முருகப் பெருமானை போற்றி வழிபடும் ஆடிக் கிருத்திகை விழா முருகன் ஆலயங்களில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களிருந்து வருகை புரிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷங்களுடன் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, முருகனை தரிசித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து இன்று முதல் மூன்று நாட்கள், மலையடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கையில் முருகப்பெருமான், வள்ளி தெய்வாணையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதனிடையே, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின் பேரில் திருத்தணியில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம், கழிவறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மேலப்புலிவார் சாலை பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

இதேபோல், அருணரிகிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமான திருச்சி வயலூர் முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், முருகனை பக்தியுடன் வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00