வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோயிலான புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது

May 2 2016 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோயிலான புனித சூசையப்பர் ஆலயத்தில், ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி செபஸ்தியார்நகரில் உள்ள இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பெரிய தேர்பவனி நேற்று விமரிசையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூசையப்பர் சொரூபம் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. முன்னதாக நடைபெற்ற சிறப்புத் திருப்பலி, செபமாலை, நவநாள்செபம் போன்ற நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியும், காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

இதனிடையே, கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி ஆலயத்தின் உற்சவ திருவிழாவை யொட்டி, உற்சவ மூர்த்திகளின் பல்லக்கு தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஸ்ரீலட்சுமி தேவியார், ஸ்ரீசாமூண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீநரசிம்மமூர்த்தி ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருப்பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பல்லக்கு தேர்பவனியில், திரளானோர் கலந்துகோண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00