கும்பகோணம் மகாமக பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஅபிமுகேஸ்வரர் ஆலயங்களில் பந்தல்கால் முகூர்த்தமும், திருத்தேர்களுக்கு முகூர்த்தமும் நடைபெற்றன

Feb 4 2016 8:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் மகாமக பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீராமசுவாமி ஆலயம் ஸ்ரீஅபிமுகேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் பந்தல்கால் முகூர்த்தமும், திருத்தேர்களுக்கு முகூர்த்தமும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மகாமக பெருவிழாவுடன் தொடர்புடைய சிவ, வைணவ ஆலயங்களில் பந்தல்கால் முகூர்த்தம் மற்றும் திருத்தேர்களுக்கு முகூர்த்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படும் ஸ்ரீராமசுவாமி கோயிலில் மகாமக பெருவிழாவுக்காக பந்தல்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தல்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமசுவாமி ஆலயத்தின் திருத்தேருக்கும் அபிஷேகம் செய்து விழா தொடங்கியது. இதேபோன்று, மகாமக குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅபிமுகேஸ்வரர் ஆலயத்திலும் பந்தல்கால் மற்றும் திருத்தேர் முகூர்த்தம் நடைபெற்றது. இரு விழாக்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00