பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா : சேலம் ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களின் நூற்றுக்கணக்கான காவடிகள், சரணகோஷத்துடன்கோயிலுக்குள் நுழைந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது

Feb 1 2016 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சேலம் ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களின் நூற்றுக்கணக்கான காவடிகள், சரணகோஷத்துடன்கோயிலுக்குள் நுழைந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த வாரம் தேரோட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெறும் சேலம் மாவட்டம் எடப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களின் காவடித் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். மன்னர் ஆட்சிக் காலத்தில் பழனியில் நடைபெற்ற தைப்பூசத்தின்போது தேர் மண்ணில் புதைந்து நின்றபோது, யானைகள், பக்தர்கள் என பலரும் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் முடியாததால், எடப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் தேரை மீட்டதாக வரலாறு உண்டு.

இதனால், ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களின் காவடி மலைக்கோயிலில் பிரசித்திப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களின் நூற்றுக்கணக்கான காவடிகள் மலைக்கோயிலுக்குள் நுழைந்தன. அப்போது, காவடி சுமந்து வந்த பக்தர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மயில்பீலி காவடி, இளநீர் காவடி, பாதயாத்திரை பக்தர்களின் அலங்கார குடைகள் என குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தால், காணும் இடமெல்லாம் காவடிகளாகவே தென்பட்டன.

இந்த சிறப்பு காவடி திருவிழாவையொட்டி, 25 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00