கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு, 7 திருக்கோவில்களில் யாகசாலை பூஜைகள் தொடங்கியன

Nov 27 2015 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு, 7 திருக்கோவில்களில் யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 22-ம் தேதி மகாமகப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி இப்பகுதியில் உள்ள 69 திருக்கோவில்களுக்கு, 13 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 39 திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், மேலக்காவேரி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம், ஸ்ரீநவநீத கிருஷ்ணன் ஆலயம் உள்ளிட்ட 7 கோயில்களுக்கு, நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காவிரியிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரால், யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன.

இதேபோல், புதுச்சேரி லாஸ்பேட்டை சாந்தி நகர் ஸ்ரீவலம்புரி வெற்றி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதனையடுத்து ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00