வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் வசதிக்காக 650 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Aug 29 2015 7:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கீழ்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என அழைக்கப்படும் இந்த பேராலயத்தில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மறைமாவட்ட ஆயர் அருட்திரு தேவதாஸ் அம்ரோஸ் தலைமையில், கொடி ஏற்றப்பட்டு கூட்டுத் திருப்பலி நடைபெறவுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள நிலையில், 65 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில், பல்வேறு பகுதிகளிலிருந்து 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேராலய ஆண்டு பெருவிழா, செப்டம்பர் 7-ம் தேதி, வேளாங்கண்ணி அன்னையின் பெரிய தேர்ப்பவனியுடன் நிறைவடைகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00