திருவள்ளுர், நாமக்கல், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்

Aug 28 2015 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் உள்ள எல்லையம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், குடமுழுக்கு விழாவிற்கான யாக சாலை பூஜை தொடங்கியது. இதில் ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் அருகே ரெட்டிபட்டியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர விமானங்களுக்கு புனித நீர் வார்க்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி வரகநேரியில் உள்ள பிரம்மரிஷி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகள் ஆசிரமத்தில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான பூஜைகள் தொடங்கியது. யாகசாலை பூஜையில் ஆராதிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரக்கலசங்களில் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த வைபவத்தில் உள்ளூர் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் 100 ஆண்டு பழமைவாய்ந்த திரெளபதி அம்மான் கோயிலில், திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் ஆராதிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய தேவி அம்பாள் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில், பொன்னமராவதி, திருமயம், நமண சமுத்திரம், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதனிடையே, மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் நந்திப் பெருமானுக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆற்றில் தண்ணீர் செல்வதை அடுத்து, அபிஷேகப் பொருட்களை படகில் கொண்டு சென்று, சிறப்பு ஆராதனையில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00