திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு

Jul 3 2015 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி ஆலயத்தில், தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்டமான திருக்குளத்தில், தெப்பம் வலம் வந்த காட்சியை கண்டுகளித்தனர்.

குலோத்துங்க சோழனின் விண்ணகரம் என அழைக்கப்படும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஆனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்றிரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை நடைபெற்றது. 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹரித்திராநதி தெப்பகுளத்தில், 41 அடி உயரத்திற்கு மின் விளக்குளால் அழகுற அமைக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி - சத்தியபாமா சமேதராக ஸ்ரீராஜகோபாலசுவாமி எழுந்தருளி 3 முறை வலம் வந்து அருள்பாலித்தார். திருக்குளத்தின் கரைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீரில் மிதந்து வந்த தெப்பத்தின் அழகை கண்டு களித்ததோடு, தெப்பத்தில் எழுந்தருளிய இறைவனை மனமுருக வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00