வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Jun 2 2023 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழநி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் உலா வந்த சாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

வைகாசி விசாகத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்‍கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பாதயாத்திரையாக வந்த பக்‍தர்கள் வாயில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்‍கடன் செலுத்தினர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக்‍ கொண்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தங்கக் கவசம் வைரவேல் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்துடன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தெப்போற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜனகை மாரியம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளில் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனை வழிபட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வருடாந்திர பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், கோயில் உட்பிரகாரங்களை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

புதுச்சேரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் 37ம் ஆண்டு மஹோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோஷங்கள் முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சென்னை எண்ணூரில் கருமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் செய்து வைக்கப்பட்ட திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தென் திருப்பதி எனப் போற்றப்படும் திருச்சி துறையூர் பெருமாள் மலை கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்‍குப் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி சர்வ அலங்காரத்தில் தம்பதி சமேதரராக திருத்தேரில் எழுந்தருளினார். துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்த திரளான பக்தர்கள், "கோவிந்தா, கோவிந்தா" என பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள அருள்மிகு கருப்பராயன் உடன் கன்னிமார் திருக்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் புனித தீர்த்த குடம் எடுத்து வந்து கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை முதன்முறையாக பெண்கள் நடத்தியது குறிப்பிடத்தக்‍கது.

சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டியில் உள்ள அருள்மிகு பச்சியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கோயில் அர்ச்சகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பச்சியம்மனுக்‍கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் வள்ளிதேவசேனா சமேத அறுபடைவீடு முருகன் திருக்கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்‍தர்கள் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியில் அமைந்துள்ள சிங்காரவேலவர் திருக்‍கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் ருத்ரபாராயணம் வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்‍கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00