புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆணைத் திருவிழா - இரண்டாம் நாள் நிகழ்வில் சுவாமி அம்பாள் வீதி உலாவை தரிசித்த பக்தர்கள்

Jul 5 2022 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆணைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனித் தோரோட்டம், தெப்பத் திருவிழா போன்ற திருவிழாக்களில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இதில் ஆனி தேரோட்டம் மிகவும் சிறப்புக்குரியதாகும். கடந்த 3ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து இரவு நெல்லையப்பர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00