நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்ட திருவிழா தொடங்கியது - கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Jul 3 2022 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் நடைபெறும் ஆனி திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்‍கான ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பர் கோயில் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. சந்தனம், பன்னீர், திருநீர், தேன், இளநீர் ஆகியவற்றை கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவையொட்டி தினமும் காலை மாலை என இருவேளையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00