கொரோனாவின் தீவிரத்தால் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் மூடல் - உலக புராதன சின்னம் என்ற சிறப்பை பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் ஆலயமும் மூடப்பட்டது

Apr 16 2021 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை மூட உத்தரவிடப்பட்டதை அடுத்து, தஞ்சை பெரிய கோவில், வேலூர் கோட்டை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற நினைவுச் சின்னங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தளங்கள், கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மெ 15-ம் தேதி வரை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற வேலூர் கோட்டை மூடப்பட்டு, பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரம்மோற்சவம் நடைபெற இருந்த நிலையில், விழா ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டது. இதே போன்று, கோட்டையில் இருந்த இரண்டு அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன.

இதேபோன்று, தஞ்சை பெரிய கோவில் நுழைவு வாயிலும் மூடப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோயில் மூடப்பட்டாலும், ஆகம விதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயமும் மூடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00