சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை முதல் ஜனவரி 14 வரை பக்தர்களுக்கு அனுமதி
Jan 9 2021 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை தொடங்கி ஜனவரி 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. சதுரகிரி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.