கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா - பல்வேறு பூஜை பொருட்களை கொண்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

Sep 28 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அங்கு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா விமரிசையாக நடைபெற்றது.

அக்னி ஸ்தலம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை மலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள். இந்த தீபத்திருவிழாவையொட்டி பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று வழக்கமான பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன. சம்மந்த விநாயகர் சன்னதியில் நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து, பந்தக்கால் விழா நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள் பலரும் பங்கேற்று பூஜைகளை செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00