திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர்

Feb 28 2020 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு 47 ஆண்டுகளுக்‍குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.

பழையனூர் கிராமத்தில் கடந்த 47 ஆண்டுகளுக்‍கு முன்னர் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சக்‍கரத்தில் பழுது ஏற்பட்டதால் அதன் பிறகு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பழையனூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.வெங்கடேசனின் மனைவி துர்காதேவி, அ.ம.மு.க ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பொதுமக்‍களுடன் கலந்தாலோசித்து 27 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, தேர் புதுப்பிக்‍கப்பட்டது. சிறப்புப்பூஜைகளுக்‍குப் பின்னர் இன்று தேரோட்டம் நடைபெற்றது. முக்‍கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும், சென்னை, ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.ஏ.ஜி.பஞ்சாட்சரம், திருவண்ணாமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00