இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச - பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்

Nov 18 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்க உள்ளார்.

அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்‍கை தொடங்கியதில் இருந்தே முன்னிலையில் இருந்த கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவியேற்கிறார். இதையயொட்டி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்‍சேவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00