ஊழல் வழக்கு விசாரணையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறியுள்ளதாக நெறிமுறைகள் கண்காணிப்பு குழு அறிக்கை

Aug 16 2019 9:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி. லவாலின் என்கிற நிறுவனம், உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அந்நாட்டு மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் லிபியாவில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற, அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கனடா ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தின் விவகாரத்தில், ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறினார் என, அந்நாட்டின் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நெறிமுறைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதே சமயம் அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00