இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு - நாடுமுழுவxதும் பொதுமக்‍கள் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி

Apr 23 2019 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, நாடு முழுவதும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்நாட்டு நேரப்படி காலை 8.30 மணியளவில், நாடு முழுவதும், உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட உடல்கள், மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நெகோம்போ பகுதியில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில், ஏராளமானோர் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தியபடி, உயிரிழந்தவர்களுக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00