அமெரிக்‍காவில் இனவெறியால் பலியான 11 பேரின் குடும்பங்களுக்‍கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் - தேசியக்‍ கொடிகளை அரைக்‍கம்பத்தில் பறக்‍கவிட்டும் உத்தரவு

Oct 28 2018 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் இனவெறி காரணமாக பலியான 11 பேரின் குடும்பங்களுக்‍கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவின் பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பர்க்‍ நகரில் உள்ள யூத வழிபாட்டு மையத்தில் நேற்று குழந்தை ஒன்றுக்‍கு பெயர்சூட்டும் விழாவுக்‍காக பலர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்‍கியுடன் வந்த 46 வயதான ராபர்ட் போவர்ஸ் என்பவன் யூதர்களுக்‍கு எதிராக ஆவேசமாக முழக்‍கமிட்டபடி வெறித்தனமாக சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்‍கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். 4 போலீசார் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்‍கிடமாக இருப்பதாகக்‍ கூறப்படுகிறது. போலீசார் திருப்பிச் சுட்டதில் காயம் அடைந்த ராபர்ட் போவர்ஸ், போலீசாரிடம் சரணடைந்தான்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், துப்பாக்‍கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கொடூரச் செயலை தடுத்து நிறுத்த மீண்டும் மரண தண்டனையைக்‍ கொண்டு வர அவசியம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

அமெரிக்‍காவில் யூதர்கள் சுட்டுக்‍ கொல்லப்பட்டதைக்‍ கண்டித்தும், அவர்களின் குடும்பத்தினருக்‍கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தும், இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அமெரிக்‍காவில் நிகழ்ந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மனம் நொறுங்கிப் போனதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

துப்பாக்‍கிச் சூட்டில் இறந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமெரிக்‍காவில் தேசியக்‍ கொடி அரைக்‍கம்பத்தில் பறக்‍கவிடப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை இதனை நடைமுறைப்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00