அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் சம்பவம் : 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

Sep 11 2018 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் உலக வர்த்தக மைய கோபுரம் மீது அல்-கய்தா தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்தியதன் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதையொட்டி, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த உலகமே தன் ஆளுகையின் கீழ் இருக்‍கவேண்டும் என விரும்பும் அமெரிக்‍காவுக்‍கு அன்று அப்படி ஒரு அடி விழும் என அந்நாட்டில் யாருமே எதிர்பார்த்திருக்‍க மாட்டார்கள். கடந்த 2001ம் ஆண்டு இதே செப்டம்பர் 11ம் நாள் நியூயார்க்‍ நகரில் வான் முட்ட நின்றிருந்த உலக வர்த்தக மைய கட்டடமான இரட்டை கோபுரம் மீது அதி பயங்கர தாக்‍குதல் நடத்தப்பட்டது. கடத்தப்பட்ட விமானங்களைக்‍ கொண்டு அல்-கய்தா தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்தக்‍ கட்டடம் மீது பயங்கரமாக மோதியதில் தீப்பிழம்பாய் பற்றி எரிந்த கட்டடம் பின்னர் அப்படியே சரிந்து தரைமட்டமானது.

இதேபோல், அமெரிக்‍காவின் பாதுகாப்பு மிகுந்த பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகம் அமைந்திருக்‍கும் பென்டகன் பகுதியிலும், இதேபோல் அன்றைய தினம் விமானத்தைகொண்டு தாக்‍குதல் நடத்தப்பட்டது. அமெரிக்‍காவை மட்டுமின்றி உலகையே நடுங்க வைத்த இந்தத் தாக்‍குதல் சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்ததன் 17ம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, தாக்குதல் நடத்தப்பட்ட நியூயார்க்‍ உலக வர்த்தக மைய பகுதியிலும், தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00