வட கொரியா - தென் கொரியா இடையே நடைபெறவிருந்து உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை திடீர் ரத்து - அமெரிக்‍க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் இடையேயான சந்திப்பு கேள்விகுறி

May 16 2018 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கொரியா - தென் கொரியா இடையே இன்று நடைபெறவிருந்த உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. இதனால், அமெரிக்‍க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் இடையேயான சந்திப்பு கேள்விகுறியாகியுள்ளது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்தனர். அணு ஆயுதத்தை முற்றிலும் கைவிடும் வகையிலான ஒப்பந்தம் இருநாட்டுத் தலைவர்களிடையே கையெழுத்தானது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்‍கா பெரும் ஆதரவாக இருந்தது.

அதன்படி, மீண்டும் இருநாட்டு எல்லையில் உள்ள பன்முஞ்சோமின் அமைதி மாளிகையில் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை வடகொரியா திடீரென ரத்து செய்துள்ளது.

இதனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்‍க சந்திப்பு கேள்விக்‍குறியாகியுள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தப்படுவதே, இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என வடகொரிய செய்தி நிறுவனம் KCNA கூறியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00