வடகொரிய தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ, மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் வெளியானதால் பரபரப்பு

Feb 21 2017 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரிய தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ, மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய தலைவராக Kim Jong-Un பதவி வகித்து வருகிறார். இவருடைய அண்ணனான Kim Jong-Nam, கடந்த 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மக்காவ் செல்வதற்காக, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவர் மீது, பயங்கர விஷ தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பதவி போட்டி காரணமாக, அவரது தம்பியும், வடகொரிய தலைவருமான Kim Jong-Un, சதித்திட்டம் தீட்டி கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோ பதிவுகள் மலேசியாவின் பல்வேறு இணையதங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினத்தன்று, கோலாலம்பூர் விமான நிலையத்தில் Kim Jong-Nam பின்னால் நின்றிருந்த பெண் ஒருவர், திடீரென தனது இரண்டு கைகளாலும் Kim Jong-Nam-ன் முகத்தில் அழுத்தமாக எதையோ தேய்த்துவிட்டு வேகமாக சென்றுவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த படுகொலை தொடர்பாக வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் வடகொரிய நாட்டைச் சேர்ந்த 2 பெண்களும், 2 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, Kim Jong-Nam-ன் உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என வடகொரியா விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது. இதனையடுத்து, மலேசியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்கப் போவதில்லை என வடகொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், இரு நாடுகளிடையே பிரச்னை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00