துருக்கி நாடாளுமன்றத்தில், அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக கூச்சல் குழப்பம் : பெண் எம்.பி.க்கள் திடீரென மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Jan 20 2017 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கி அதிபர் Tayyip Erdogan-னின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான விவாதத்தின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில், பெண் எம்.பி.க்களிடையே மோதல் ஏற்பட்டது. துருக்கி அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது. ஆனால், ஜனநாயக அமைப்பை சர்வாதிகார ஆட்சியாக மாற்ற அரசு முயல்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துருக்கி அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. அதிபர் Tayyip Erdogan தமது பதவிக் காலத்தை நீட்டித்துக்கொள்ளும் வகையில், இந்த புதிய திருத்தம் அமைந்துள்ளது. இதனை சட்டமாக்கும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பெண் எம்.பிக்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00