அமெரிக்காவின் 45-வது அதிபராக இன்று பதவியேற்கிறார் Donald Trump - வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது பதவியேற்பு நிகழ்ச்சி

Jan 20 2017 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் அதிபராக Donald Trump பதவி ஏற்கும் நிகழ்ச்சி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, குடியரசு கட்சியை சேர்ந்த Donald Trump எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அந்நாட்டின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் இன்று சர்வதேச நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளுடன், வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது. இதில் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் பாலிவுட் நடனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Donald Trump பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

முன்னதாக, அதிபராக பதவியேற்கும் Donald Trump, துணை அதிபர் Mike Pence ஆகியோர் Arlington தேசிய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் Donald Trump-க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00