ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகம் மீட்பு - கடும் சண்டைக்குப் பிறகு யாரிம்ஜா மாவட்டமும் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு

Jan 16 2017 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து, மொசூல் பல்கலைக் கழகம் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் ஈராக் நாட்டின் முக்கிய நகரமான மொசூலை, கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஒரே நகரத்தை மீட்பதற்காக, ஈராக் சிறப்புப் படைகள், கடும் சண்டையிட்டு முன்னேறி வருகின்றன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் பல்கலைக் கழகத்தை ஈராக் சிறப்புப் படைகள் மீட்டுள்ளன. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டைக்குப் பின்னர், பல்கலைக் கழகம் மீட்கப்பட்டதாக, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள பரிசோதனைக் கூடங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதேபோல், மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மிகப்பெரிய பகுதியாக Yarimja மாவட்டத்தையும் ஈராக் சிறப்புப் படைகள் முழுமையாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00