விபத்தில் சிக்கிய மலேசிய விமானத்தின் சிதைவுகளை தேடி உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் மடகாஸ்கர் தீவுக்கு பயணம்

Dec 3 2016 9:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டரை ஆண்டுகளுக்கு முன், நடுவானில் மாயமாக மறைந்து விபத்தில் சிக்கிய மலேசிய விமானத்தின் சிதைவுகளை தேடி, இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள், மடகாஸ்கர் தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், நடுவழியில் மாயமாக மறைந்தது. இந்த விமானம் விபத்துக்குள்ளாகி எங்காவது கடலில் விழுந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இந்தியப் பெருங்கடலில் பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில விமான சிதைவுகள் கிடைத்த போதிலும், அவற்றை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வர இயலவில்லை.

இந்நிலையில், ஆஃப்ரிக்காவின் Madagascar தீவு அருகே உள்ள கடலோரப் பகுதியில், காணாமல்போன மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் 6 பேர், அப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00