தொடர் அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு

Nov 30 2016 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. சமீபத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்வதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா சந்தித்து வருகிறது. இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்துக்கு, சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

வடகொரியா மீது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00