வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் ஜப்பானில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு : பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்பு

Oct 24 2016 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், ஜப்பானில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பும், விமான சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பை அந்நாட்டு பிரதமர் Shinzo Abe நேரில் பார்வையிட்டார்.

வடகொரியா அவ்வப்போது அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ள ஜப்பானை மிரட்டும் வகையில், ஜப்பான் கடல் எல்லைக்குள் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி அண்மையில் வடகொரியா சோதனை நடத்தியது. இதில் ஜப்பானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜப்பான், தங்கள் நாட்டு ராணுவத்தை உஷார்நிலைக்கு ஆயத்தப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிரமாண்ட ராணுவ ஒத்திகை நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், அதிநவீன போர் கருவிகளுடன் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர். ராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து, போர் விமானங்களின் பிரம்மிப்பூட்டும் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராணுவ அணிவகுப்பை, ஜப்பான் பிரதமர் Shinzo Abe நேரில் பார்வையிட்டு, வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார். ஏராளமானோர் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00