எதிப்தில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவியது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

Oct 23 2016 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

எதிப்தில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவியது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்ற முகமது மோர்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்ததால், கடந்த 2013-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். மோர்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றபோது, அவற்றை ஒடுக்கும் விதத்தில் போராட்டக்காரர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோர்சி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், கடந்த 2012-ம் ஆண்டு, கெய்ரோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறையை ஏவியது தொடர்பான வழக்கில், மோர்சிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மோர்சிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00