அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஹிலரி கிளிண்டன் குற்றச்சாட்டு : ஜனநாயகக் கட்சியின் வெற்றிவாய்ப்பை சீர்குலைக்கும் நோக்கில் அதிபர் ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதால் பரபரப்பு

Oct 22 2016 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுப்பதன்மூலம், அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக Donald Trump இருப்பதாக ஹிலரி கிளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், Ohio மாகாணம் Cleveland நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் மட்டுமே தேர்தல் முடிவுகளை ஏற்பேன் என பேசிவருவதன் மூலம், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, வடக்கு கரோலினா மாகாணம் Fletcher என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய Donald Trump, பிலிப்பைன்ஸ் நாடு தொடர்பாக ஒபாமா அரசு பின்பற்றும் கொள்கையால், அந்நாடு தற்போது சீனா மற்றும் ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஹிலரி கிளிண்டனுக்கும், Donald Trump-க்கும் மக்களின் ஆதரவு முன்னும், பின்னுமாக இருப்பதால், வெற்றிபெறப் போவது யார்? என உலகமே எதிர்நோக்கி உள்ளது.

விக்கிலீக்ஸ் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Julian Assange நிறுவியுள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ ரகசியங்களை ஏற்கெனவே அம்பலமாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்களை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. bobama@ameritech.com என்ற இணையதள முகவரியில் இந்த ரகசிய மின்னஞ்சல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதள முகவரியில் 7 செய்திகள் இடம்பெற்றுள்ளதாக New York Post நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற உலக நிதி நெருக்கடி குறித்த G-20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அன்றைய அதிபர் ஜார்ஜ் W புஷ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என, அதே மாதம் 4-ம் தேதி ஒபாமாவுக்கு, அவருடைய அதிகாரி John Podesta மின்னஞ்சல் அனுப்பியிருந்ததாகவும், அதன்படி வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒபாமா கலந்துகொள்ள வில்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார தலைவராக தற்போது செயல்படும் Podesta-விடம் இருந்து 23 ஆயிரம் மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதும், அவற்றில் ஒபாமா தொடர்பான மின்னஞ்சல்களும் அடங்கும் என்றும் New York Post தெரிவிக்கிறது.

ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல் குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. ஜனநாயகக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு கூடியுள்ளதால், அதனை சீர்குலைக்க ரஷ்யா இதுபோன்ற Cyber தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது. இந்நிலையில், ஒபாமாவின் ரகசிய மின்னஞ்சல்கள் மேலும் வெளியாகும் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00