சிரியாவில் உச்சகட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அலெப்போ நகரில் 11 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவிப்பு

Oct 22 2016 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கான தாக்குதலை இன்று வரை நிறுத்தி வைக்க ரஷ்ய கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

சிரியாவில், அதிபர் Bashar al-Assad தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கில், அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போரட்டம், உள்நாட்டு போராக உருவெடுத்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போரில், சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன.

சிரிய நாட்டு படைகள் ரஷ்ய படைகளுடன் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள இடங்களின் மீது ரஷ்ய கூட்டுப்படைகள் நேற்றுமுன்தினம் நடத்திய விமானத் தாக்குதலில், குழந்தைகள் உட்பட 50 பேர் பலியாயினர்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில், நேற்று 8 மணிநேர போர் நிறுத்தம் மேற்கொள்ள சிரியா-ரஷ்யா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று, போர்நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டித்து, இன்று இரவு 7 மணிவரை வான்வெளி தாக்குதல்களை நிறுத்தி வைக்க ரஷ்ய கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால் ரஷ்யா அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00