ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் ரயில் என்ஜினை ஃபிரான்ஸ் தாயரித்து சாதனை

Sep 27 2016 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் ரயில் என்ஜினை ஃபிரான்ஸ் தாயரித்து சாதனை படைத்துள்ளது. இது அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது.

டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படும் ரெயில் என்ஜின்கள் தற்போது பரவலாகக் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஏற்பட உள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மாற்று எரிபொருளைக் கொண்டு இயக்கப்படும் வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகள் தயாரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஃபிரான்சில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் இத்தகைய திறன் கொண்ட ரயில் என்ஜினை உருவாக்கியுள்ளது. இந்த ரயில் என்ஜின் வரும் 2017-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் 'கொராடியா லின்ட்' என்ற பயணிகள் ரயிலில் பொருத்தப்பட உள்ளது. இப்புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் 'டேங்க்' அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள், மின்சக்தியாக மாறி ரெயில் என்ஜினை இயக்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரெயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஃபிரான்ஸ் பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00