சூடு பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தல் - ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் - குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் நேரடி விவாதம்

Sep 24 2016 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump ஆகியோர் பங்கேற்கும் முதலாவது விவாதம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக Donald Trump-ம் போட்டியிடுகின்றனர். இருவரும் தங்களை ஆதரித்து, உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் Hempstead என்ற இடத்தில் அமைந்துள்ள Hofstra பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் முதல்முறையாக நேரடி விவாதத்தில் கலந்துகொள்கின்றனர். இந்த விவாதம், தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதால், அதனை வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதனிடையே, Trump-ன் நீண்டகால அரசியல் எதிரியான அமெரிக்க செனட் சபை உறுப்பினர் Ted Cruz தற்போது நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார். அதிபர் தேர்தலில் ஹிலரி கிளிண்டனை தோற்கடிக்க Trump-ஆல் மட்டுமே முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள அமெரிக்கர்கள், குடியரசுக் கட்சி வேட்பாளரான Trump-க்கு எதிராக வாக்களிக்கும்படி விளம்பரம் செய்துள்ளனர். அத்துடன் Trump-க்கு எதிரான வாசகம் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தி, எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00