இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 20 பேர் பலி : 6 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Sep 22 2016 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் மேற்கில் உள்ள ஜாவா மாகாணத்தில் கனமழை காரணமாக Cimanuk ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, Garut நகர் உள்பட 6 மாவட்டங்களின் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 20 பேர் உயிரிழந்தனர்.

ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள மருத்துவமனையிலும் வெள்ளம் சூழ்ந்ததால் சிகிச்சைபெறுவோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துவரப்பட்ட வாகனங்கள் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தால் ஏராளமான வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00