ஃபின்லேண்டு நாட்டில் நடைபெற்ற ஏர் கிட்டார் உலக சாம்பியன் போட்டி : அமெரிக்க இசைக்கலைஞர் வெற்றி

Aug 27 2016 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

Finland நாட்டில் Oulu நகரில் நடைபெற்ற Air Guitar உலக சாம்பியன் போட்டியில் அமெரிக்க இசைக்கலைஞர் வெற்றிபெற்றார்.

Finland நாட்டில் ஆண்டுதோறும் Air Guitar உலக சாம்பியன் போட்டி நடைபெறுவது வழக்கம், இல்லாத Guitar இசைக்கருவி இருப்பது போல பாவனை செய்து, அங்கஅசைவுகளுடன் வாசிப்பது தான் Air Guitar இசைப்போட்டியாகும். தொடர்ந்து 21-வது ஆண்டாக இந்த போட்டி Finland நாட்டில் Oulu நகரில் நேற்று நடைபெற்றது. ஜெர்மனி, அமெரிக்கா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட Air Guitar இசைக்கலைஞர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த Matt Airistotle என்ற இசைக்கலைஞரின் பாவனையும், அங்கஅசைவும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டியில் வெற்றி பெற்ற Airistotle சாம்பியனாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு உண்மையான விலையுயர்ந்த Guitar இசைக்கருவி பரிசாக வழங்கப்பட்டது. உலகில் போர்களுக்கு முடிவுகட்டும், பருவநிலை மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தீயவை அனைத்தும், மறையவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஆண்டுதோறும், Air Guitar உலக சாம்பியன் போட்டி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00