காபூல் அமெரிக்க பல்பலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 16 பேர் பலியான சம்பவம் - பாகிஸ்தானின் திட்டமிட்ட சதி என அஃப்கனிஸ்தான் அதிபர் குற்றச்சாட்டு

Aug 26 2016 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தானில் அமெரிக்க பல்பலைக்கழகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மண்ணில் இருந்து சதித்திட்டம் தீட்டப்பட்டதாக, அஃப்கனிஸ்தான் அதிபர் Ashraf Ghani குற்றம்சாட்டியுள்ளார்.

அஃப்கனிஸ்தானின் காபூல் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பல்கலைக் கழகத்திற்குள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டனர். 53 பேர் படுகாயமடைந்தனர். அஃப்கனிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், அஃப்கனிஸ்தான் அதிபர் Ashraf Ghani செய்தியாளர்களிடம் பேசியபோது, அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கான சதித்திட்டம், பாகிஸ்தானில் தீட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகிஸ்தானின் தலைமை ராணுவத் தளபதியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00