இத்தாலியில் ஏற்கனவே கடுமையான நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளான பகுதியில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் : மீட்புப் பணிகள் தீவிரம்

Aug 26 2016 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் ஏற்கனவே கடுமையான நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளான பகுதியில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, மீட்புப் பணிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டின் மையப் பகுதியில் நேற்றுமுன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி இரண்டாக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் ரோம் உட்பட பல்வேறு நகரங்களை உலுக்கியது. Accumoli, Amatrice உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மழை கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதேபோல் Amatrice என்ற பகுதியில் கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் 10 வயது சிறுமி 15 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கித் தவித்தார். இதையறிந்த மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி சிறுமியை மீட்டனர்.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மலையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறி, வெட்டவெளியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Amatrice நகரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.3 ஆக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்கள் பொதுமக்களை மேலும் அச்சம் அடையவைத்துள்ளன. மீட்புப் பணிகளுக்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில்தான் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00