உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா - தென்கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

Aug 24 2016 7:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதற்கு தென்கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது ஆயுத பலத்தை நிலை நாட்ட சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதற்கு ஐநா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பானுக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் Sun Nahm-kook, வடகொரியா அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான சதி வேலைகளை தொடர்ந்து செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதேபோல், வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் அரசும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகொரியா மீண்டும் பொறுப்பற்ற செயலை தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருவதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. வடகொரியாவின் அதிரடி ஏவுகனைச் சோதனைக்கு சீனாவும், ஐநா சபையும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00