பாகிஸ்தானில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தீ வைத்து சூறையாடிய சம்பவம் : முக்கிய அரசியல் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பு

Aug 24 2016 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில், தனியார் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய அரசியல் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

பாகிஸ்தானில், Muttahida Qaumi இயக்கம் என்ற அரசியல் கட்சி உள்ளது. இதன் தலைவர் அல்டாஃப் உசேன், லண்டனில் தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சியில், அல்டாஃப் உசேனின் பேச்சு குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கட்சியினர், கராச்சியில் உள்ள அந்த தொலைக்காட்சி அலுவலகம் மீது கற்களை வீசியதோடு, உள்ளே நுழைந்து ஒளிபரப்பு கருவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அலுவலகத்துக்கு தீ வைத்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். இருப்பினும், இத்தாக்குதலில் தங்கள் கட்சித் தொண்டர்கள் ஈடுபடவில்லை என, Muttahida Qaumi இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், Muttahida Qaumi இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் நேற்று, திடீர் சோதனையிட்டு, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00