தெற்கு சூடானில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக ஐ.நா.வின் கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல்

Aug 23 2016 8:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெற்கு சூடானில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கென்ய அதிபர் Uhuru Kenyatta மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை நைரோபியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்துப் பேசினார். தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு தலைவர்கள் சொல்லாலும், ஒப்பந்தத்தாலும் சமாதான உடன்படிக்கையை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஜான் கெர்ரி, நாட்டை உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்லும் செயல்களை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக உள்நாட்டுப் போரை தடுத்து நிறுத்த ஐ.நாவுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என தெற்கு சூடான் தெரிவித்துள்ள நிலையில், 4 ஆயிரம் பேர்கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்புப் படையை தெற்கு சூடான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜான் கெர்ரி கேட்டுக்கொண்டுள்ளார். தெற்கு சூடானில் மனித உரிமையை நிலைநிறுத்துவதற்கான 120 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அளிக்கும் எனவும் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00