அமெரிக்க அதிபரானால் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் - தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உறுதி

Jul 29 2016 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால், நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் டெனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தலைவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஃபிலடெல்பியா நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஹிலாரி கிளிண்டன், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மதம், இனம் தொடர்பான வேறுபாடுகள் களையப்படும் என்றும், அனைவரும் அமெரிக்கர்கள் என்ற உணர்வு மேம்படுத்தப்படும் என்றும் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டார். தனிநபர் எவரும் அமெரிக்காவை முன்னேற்ற முடியாது என சுட்டிக்காட்டிய அவர், அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00