அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் மிகவும் தகுதிவாய்ந்தவர் - அதிபர் ஒபாமா புகழாரம்

Jul 28 2016 8:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபராக பதவி வகிக்க ஹிலாரி கிளிண்டனைக் காட்டிலும், தகுதிவாய்ந்த நபர் இதுவரை எவரும் இருந்ததில்லை என அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் தனது பெயரும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அதிபர் ஒபாமா உரையாற்றினார். அமெரிக்காவின் எதிர்காலம் முன்னைக் காட்டிலும் பிரகாசமாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டனைக் காட்டிலும் தகுதிவாய்ந்த நபர் இதுவரை யாரும் இருந்ததில்லை என்றும், இதில் தானும் அடக்கம் என்றும் தெரிவித்தார். குடியரசுக் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள டொனால்டு டிரம்ப்பை தாக்கிப் பேசிய அவர், வெற்று ஆரவாரங்களை குறைத்துக்கொண்டு டிரம்ப் தனது திறமையை செயலில் காட்ட வேண்டும் என சாடினார். ஃபிலடெல்பியா என்ற இடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஹிலாரி கிளிண்டன் அனுபவம் வாய்ந்தவர் என்றும், செயல்திறன்மிக்கவர் என்றும், உலக அளவில் வசீகரம் மிக்கவர் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00