அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டி வேட்பாளர் Bernie Sanders-ஐ வெற்றிகொண்டு ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரானார் ஹிலரி கிளிண்டன் : குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்புடன் நேரடி போட்டி

Jul 27 2016 9:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் வெற்றிபெற்றார். Philadelphia-வில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், போட்டி வேட்பாளர் Bernie Sanders-ஐ வெற்றிகொண்ட ஹிலரி, அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக களத்தில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் பதவிக்கான வேட்பாளராக களமிறங்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டனும், அக்கட்சியின் மூத்த தலைவர் Bernie Sanders-ம் போட்டியிட்டனர். கடந்த சில மாதங்களாக ஹிலரியும், சான்டர்ஸும் கட்சி உறுப்பினர்களிடையே ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில், Philadelphia-வில் ஜனநயாக கட்சியின் மாநாடு நேற்று நடைபெற்றது. அதிபர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் இந்த மாநாட்டில், ஹிலரி கிளிண்டன் 2,382 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனைத்தொடர்ந்து, வெற்றிபெற்ற ஹிலரி கிளிண்டனுக்கு, Bernie Sanders ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு திரட்டி வந்த ஹிலரி கிளிண்டன், கடந்த மாதமே பெரும்பான்மையான ஆதரவை பெற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஹிலரி கிளிண்டனுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஹிலரி கிளிண்டனின் இந்த வரலாற்றுச் சாதனை உலகம் முழுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். ஹிலரி கிளிண்டன், அவரது அரசியல் பயணத்தில் உச்சத்தை எட்டுவார் என்றும், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தொடர்ந்து முன்மாதிரியாகத் திகழ்வார் என்றும் முதலமைச்சர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00